முதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.

இது பரவி வரும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று வலுவாக முடிவடைந்திருந்தாலும், இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்திலேயே காணப்பட்டன. இது சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. அன்னிய முதலீடுகள் என்பது சந்தையில் பெரும் அளவிலான சரிவினைக் கண்டுள்ளது.

ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கி கூட்டம்

அதோடு இன்னும் சில தினங்களில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனால் சந்தைக்கு சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள பொருளாதாரத்தினை மீட்க, நடவடிக்கைகள் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 109.94 புள்ளிகள் அதிகரித்து, 53,085.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து, 15,955 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சற்று சரிவில் காணப்பட்டது. சென்செக்ஸ் 170.92 புள்ளிகள் குறைந்து, 52,8040.88 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 44.70 புள்ளிகள் குறைந்து, 15,811.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,240 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 676 பங்குகள் சரிவிலும், 103 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ, டைட்டன் நிறுவனம், டிவிஸ் லேப், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், டைட்டன் நிறுவனம், சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து, 74.46 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.40 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 1.11 புள்ளிகள் அதிகரித்து, 52,976.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 6.05 புள்ளிகள் அதிகரித்து, 15,861.20 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+