நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இது பல்வேறு விதமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் சீனாவின் சந்தைகள் சரிவில் காணப்படுவதையடுத்து, இந்த ஏற்றம் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகளும் சரிவில் முடிவடைந்துள்ளது. எனினும் பல்வேறு காரணிகளும் சந்தைக்கு சாதகமாக உள்ளன. இதனால் சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 268.35 புள்ளிகள் அதிகரித்து, 52,855.19 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 61 புள்ளிகள் அதிகரித்து, 15,824 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்.இ மெட்டல்ஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டைட்டன் நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், இந்தஸிந்த் வங்கி, ரிலையன்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 74.38 ரூபாயாக தொடங்கியது. இது முந்தைய அமர்வில் 74.41 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 262.76 புள்ளிகள் அதிகரித்து, 52,868.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 93.85 புள்ளிகள் அதிகரித்து, 15,856.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications