இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சரிவில் காணப்படுகின்றது.
இது நடப்பு வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சந்தைகள் ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று புராபிட் புக்கிங் செய்யப்பட்டிருக்கலாம்.
மேலும் பட்ஜெட் அறிவிப்பின் காரணமாக கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சந்தையானது ஏற்றத்திலேயே இருந்து வந்தது.
முதலீடுகள் வெளியேற்றம்
என்.எஸ்.இ தரவுகளின் படி பிப்ரவரி 2 நிலவரப்படி, 183.60 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 425.96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதுவும் சந்தையில் பெரியளவிலான மாற்றம் இல்லாததற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது தொடர்ச்சியாக 4வது அமர்வாக ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சற்று ஏற்றத்திலேயே காணப்பட்டன. சில குறியீடுகள் சரிவிலும் காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையும் சரிவில் தான் காணப்படுகின்றது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 188.15 புள்ளிகள் அதிகரித்து, 59,746.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 81.60 புள்ளிகள் அதிகரித்து, 17,698.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 77.67 புள்ளிகள் குறைந்து, 59,480.66 புள்ளிகளாகவும், நிஃப்டி 18.70 புள்ளிகள் குறைந்து, 17,761.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1221 பங்குகள் ஏற்றத்திலும், 644 பங்குகள் சரிவிலும், 115 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் & நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, டாடா கன்சியூமர் புராடக்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே என் டி பி சி, ஹெச்.டி.எஃப்.சி, லார்சன், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, ஏசியன்ஸ் பெயிண்ட்ஸ், ஐடிசி, டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், லார்சன், கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
10.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 221.2 புள்ளிகள் குறைந்து, 59,318.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 61.05 புள்ளிகள் குறைந்து, 17,718.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications