இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் தான் காணப்படுகின்றது.
இது தொடக்கத்தில் சற்று சரிவிலேயே தொடங்கி, பின்னர் ஏற்றம் கண்டு, தற்போது மீண்டும் சரிவில் காணப்படுகின்றது. இது வார இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் ஸ்டாப் லாஸ் வைத்து கவனமுடன் வர்த்தகம் செய்வது மிக நல்லது.
முதலீடுகள் வெளியேற்றம்
என்.எஸ்.இ தரவுகளின் படி பிப்ரவரி 3 நிலவரப்படி, 1597.54 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 370.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதுவும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவினை கண்டு முடிவடைந்தது. இதன் எதிரொலி இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சற்று சரிவிலேயே காணப்பட்டன. இதன் காரணமாக இந்திய சந்தையும் சரிவில் தான் காணப்படுகின்றது. சந்தையை இன்னும் மோசமாக்கும் விதமாக டாலரின் மதிப்பும் சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 238.86 புள்ளிகள் அதிகரித்து, 59,026.88 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.10 புள்ளிகள் அதிகரித்து, 17,589.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 41.95 புள்ளிகள் குறைந்து, 58,746.07 புள்ளிகளாகவும், நிஃப்டி சற்று குறைந்து, 17,560 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1299 பங்குகள் ஏற்றத்திலும்,543 பங்குகள் சரிவிலும், 89 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்பட்டாலும், முக்கிய குறியீடுகளான நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி,பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் இருந்தாலும், பெரியளவிலான ஏற்றம் என்பது இல்லை.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, ஓ என் ஜி சி, டாடா ஸ்டீல், கிரசிம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், டாடா கன்சியூமர் புராடக்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே விப்ரோ, ரிலையன்ஸ், டைட்டன் நிறுவனம், ஹெச்.சி.எல் டெக், ஐடிசி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
10.11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 82.97 புள்ளிகள் குறைந்து, 58,705.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 14.45 புள்ளிகள் குறைந்து, 17,545 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கி, பின்னர் ஏற்றம் கண்ட சந்தை தற்போது மீண்டும் சரிவில் காணப்படுகின்றது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications