முதல் நாளே க்ரீன் சிக்னல் காட்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரத்தில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளே வர்த்தகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இது நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்கமும் நாளுக்கு நாள் குறைந்து வருவது நல்ல விஷயமாகமே பார்க்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் அன்னிய முதலீடுகளும் இந்திய சந்தையில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி 11 நிறுவனங்கள்..! பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி 11 நிறுவனங்கள்..!

அமெரிக்க சந்தை ஏற்றம்

அமெரிக்க சந்தை ஏற்றம்

மேலும் நடப்பு மாதத்தில் இந்திய சந்தையில் பல்வேறு பங்கு வெளியீடுகள் உள்ள நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் பங்கு சந்தையானது தொடர்ந்து 7 அமர்வுகளாகவே ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

மேலும் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான டேட்டாவும் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டியினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல ஆசிய சந்தைகளும் இன்று தொடக்கத்தில் ஏற்றத்திலேயே காணப்பட்டன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 214.88 புள்ளிகள் அதிகரித்து, 52,699.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 92.50 புள்ளிகள் அதிகரித்து, 15,814.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 228.23 புள்ளிகள் அதிகரித்து, 52,712.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.30 புள்ளிகள் அதிகரித்து, 15,791.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், லார்சன், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி லைஃப், டெக் மகேந்திரா, ஜே.எஸ்.டபள்யூ, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்ரிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, டைட்டன், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்ரிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமின்றி 74.50 ரூபாயாக காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 309.29 புள்ளிகள் அதிகரித்து, 52,793.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 89.95 புள்ளிகள் அதிகரித்து, 15,812.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: India’s trade higher amid positive global cues

Market update.. Opening bell: India’s trade higher amid positive global cues
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X