நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது, அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஆசிய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
எனினும் மூன்றாவது கொரோனா அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 281.86 புள்ளிகள் அதிகரித்து, 53,119.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 31.30 புள்ளிகள் அதிகரித்து, 15,855.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 101.62 புள்ளிகள் அதிகரித்து, 52,938.83 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 37.40 புள்ளிகள் அதிகரித்து, 15,861.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1585 பங்குகள் ஏற்றத்திலும், இதே 412 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் குறியீடுகள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் பெரியளவில் ஏற்றத்தில் இல்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், லார்சன், அதானி போர்ட்ஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே லார்சன், சன் பார்மா, என்.டி.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

சென்செக்ஸ் தற்போது நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 104.11 புள்ளிகள் அதிகரித்து, 52,941.32 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 27.90 புள்ளிகள் அதிகரித்து, 15,854.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சோமேட்டோ பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.