இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் சற்று சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சற்று சரிவில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் மூன்றாவது கொரோனா அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 38.86 புள்ளிகள் அதிகரித்து, 52,691.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 10.50 புள்ளிகள் அதிகரித்து, 15,789 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1368 பங்குகள் ஏற்றத்திலும், இதே 652 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றது. பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி ஹெல்த்கேர், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், ஹெச்.சி.எல் டெக், என்.டி.பி.சி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், பவர் கிரிட் கார்ப், ஹெச்.சி.எல் டெக், என்.டி.பி.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 119.93 புள்ளிகள் அதிகரித்து, 52,773.00 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.45 புள்ளிகள் அதிகரித்து, 15,815.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+