ஏற்றத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் மீண்டும் 49,800-க்கு மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்புகள், தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள், இதனை தொடர்ந்து டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. ஏனெனில் இதெல்லாம் பொருளாதாரத்தினை விரைவில் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆசிய பங்கு சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ள நிலையில், இதுவும் சந்தைக்கு ஊக்கத்தினை கொடுத்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இதற்கிடையில் இன்று இந்திய சந்தைகள் ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 301.84 புள்ளிகள் அதிகரித்து, 49,810.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 75.30 புள்ளிகள் அதிகரித்து, 14,7660 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 358.57 புள்ளிகள் அதிகரித்து, 49,867.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 102.60 புள்ளிகள் அதிகரித்து, 14,793.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுயத்து 1021 பங்குகள் ஏற்றத்திலும், 235 பங்குகள் சரிவிலும், 42 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச் சி எல் டெக், இந்தஸிந்த் வங்கி, எண்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், ஹெச்டிஎஃப்சி லைஃப், நெஸ்டில், டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சி எல் டெக், இந்தஸிந்த் வங்கி, எண்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில் டாப் லூசர் ஆகவும் உள்ளது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 386.36 புள்ளிகள் அதிகரித்து, 49,880.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.95 புள்ளிகள் அதிகரித்து, 14,798.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் இன்று புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், கடந்த காலாண்டில் நிறுவனங்களின் அறிக்கை குறித்து எதிர்பார்க்கலாம். இதனை கவனித்து அதன் பிறகு முதலீடுகளை அதிகரிக்க துவங்கலாம். நாடு முழுவதும் தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வேகமாக பரவி வரும் நிலையில், அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் சந்தை ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+