நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் இந்திய சந்தைகள், இன்று தொடக்கத்திலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
என்ன காரணம்?
அமெரிக்க பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலேயே ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. எனினும் முதலீட்டாளர்கள் சர்வதேச காரணிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக அன்னிய முதலீடுகள், அமெரிக்க சந்தைகள், ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் அறிவிப்புகள் என அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 303.24 புள்ளிகள் அதிகரித்து, 49,965 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.20 புள்ளிகள் அதிகரித்து, 14,893.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் இந்திய சந்தைகள் ஏற்றத்திலேயே காணப்பட்டன. குறிப்பாக சென்செக்ஸ் 301.65 புள்ளிகள் அதிகரித்து, 49,963.41 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 88.20 புள்ளிகள் அதிகரித்து, 14,907.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 979 பங்குகள் ஏற்றத்திலும், 228 பங்குகள் சரிவிலும், 48 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, பஜாஜ் பின்செர்வ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ், ஹெச்டிஎஃப்சி, டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 373.96 புள்ளிகள் அதிகரித்து, 50,052.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 117.65 புள்ளிகள் அதிகரித்து, 14,936.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று பெரும் சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Market update.. Opening bell: Indian indices open higher amid mixed global cues


Click it and Unblock the Notifications