நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் சந்தை விடுமுறை என்ற நிலையில் இன்றும் தொடக்கத்திலேயே சரிவிலேயே தொடங்கியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் கடுமையாக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இது சர்வதேச சந்தைகள் சற்று சாதகமாக உள்ள நிலையிலும், இந்திய சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 67.85 புள்ளிகள் அதிகரித்து, 47,773.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 78.30 புள்ளிகள் குறைந்து, 14,218.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 466.41 புள்ளிகள் குறைந்து, 47,239.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 136.90 புள்ளிகள் குறைந்து, 14,159.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 430 பங்குகள் ஏற்றத்திலும், 427 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், விப்ரோ, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஸ்ரீ சிமெண்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஹெச் யு எல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச் யு எல், ஆக்ஸிஸ் வங்கி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்?
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையில், சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. ஏனெனில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால், மீண்டும் பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் எதிர்மறையான வர்த்தகத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 190.74 புள்ளிகள் குறைந்து, 47,515.06 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 39.60 புள்ளிகள் குறைந்து, 14,256 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக இருந்தாலும், இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது மிக மோசமான நிலையில் பரவிக் கொண்டுள்ளது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications