நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. குரிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு 1 வருட உச்சத்தில் காணப்படுகிறது.
இது மிகப்பெரிய ஊக்கத்தொகை, தடுப்பூசி பற்றிய சாதகமான அறிவிப்புகள் என பல காரணிகளுக்கு மத்தியில் ஏற்றம் கண்டுள்ளது.
சந்தையில் அழுத்தம்
ஆனால் அதேசமயம் கொரோனாவின் தாக்கமும் வேகமாக பரவி வருகின்றது. இது எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற கவலையையும் முதலீட்டாளார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளதே என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக சந்தை தொடர்ந்து அழுத்தத்திலேயே காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் இன்று இந்திய சந்தைகள் ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து, 50,248.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.80 புள்ளிகள் அதிகரித்து, 14,867.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 336.90 புள்ளிகள் குறைந்து, 49,799.68 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.30 புள்ளிகள் குறைந்து, 14,762.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுயத்து 555 பங்குகள் ஏற்றத்திலும், 520 பங்குகள் சரிவிலும், 73 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் மாற்றமில்லாமலும், மற்றவை சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், கெயில், யுபிஎல், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், எம்&எம், ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 419.61 புள்ளிகள் குறைந்து, 49,716.97 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 97.75 புள்ளிகள் குறைந்து, 14,747.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications