தொடர் சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் சரிவில் காணப்படுகின்றன.

இது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் இந்திய சந்தையானது, வார இறுதி வர்த்தக நாளான இன்று மீண்டும் சரிவினைக் கண்டு வருவது, முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதால் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் கடந்த சில வாரங்களாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து அவ்வப்பொது வெளியேறி வந்தாலும், அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது மிக அதிகமாகவே இருந்தது. இதனால் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.

சந்தைக்கு எதிரான காரணி

சந்தைக்கு எதிரான காரணி

ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் உள்ள சில காரணிகளுக்கு மத்தியில், செப்டம்பர் 30 நிலவரப்படி அன்னிய முதலீட்டாளர்கள் 2,225.60 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 97.18 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆக இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கம் பற்றிய கவலை

பணவீக்கம் பற்றிய கவலை

தொடர்ந்து கச்சா எண்ணெய் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இறக்குமதியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், இதன் தாக்கம் அதிகம் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

Array

Array

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் தான் தொடங்கின. ஆக இதன் எதிரொலியும் இந்திய சந்தையில் காணப்படுகின்றது. இவற்றோடு சீனாவின் மின்வெட்டு பிரச்சனையும் சப்ளை சங்கியில் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், அதுவும் சர்வதேச சந்தைகளில் எதிரொலித்து காணப்படுகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 69.56 புள்ளிகள் குறைந்து, 59,056.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 65.90 புள்ளிகள் குறைந்து, 17,552.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 394.26 புள்ளிகள் குறைந்து, 58,732.10 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 110 புள்ளிகள் குறைந்து, 17,508.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 807 பங்குகள் ஏற்றத்திலும், 987 பங்குகள் சரிவிலும், 117 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ 1% மேலாக சரிவிலும், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஐடி, பேங்க் நிஃப்டி, நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ் உள்ளிட்டவை 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி, பவர் கிரிட் கார்ப், ஜே.எஸ்.டபள்யூ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருஹி சுசூகி, பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப், அல்ட்ராடெக்சிமெண்ட், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது என்ன நிலவரம்

தற்போது என்ன நிலவரம்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா குறைந்து, 74.32 ரூபாயாக காணப்படுகின்றது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 74.23 ரூபாயாகும்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 334.06 புள்ளிகள் குறைந்து, 58,792.30 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 94 புள்ளிகள் குறைந்து, 17,524.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+