ஆரம்பத்திலேயே பெரும் இழப்பில் முதலீட்டாளர்கள்.. 2% வரை வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிஃப்டி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்திருந்தன. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் தொடங்கியுள்ளன.

இதன் எதிரொலியாகத் தான் இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன

 உக்ரைன்-  ரஷ்யா பதற்றம்

உக்ரைன்- ரஷ்யா பதற்றம்

உக்ரைன் ரஷ்யா இடையில் நிலவி வந்த பதற்றமான நிலைக்கு மத்தியில், பல்வேறு நாட்டின் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையானது இன்று கூடுகின்றது. இதில் சுமூகமான நிலை எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், நிலவி வருகின்றது. இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமானது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற சூழல் இருந்து வருகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்


பிப்ரவரி 21 நிலவரப் படி, 2261.90 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 2392.85 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?


இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 1239.80 புள்ளிகள் குறைந்து, 56,443.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 443.50 புள்ளிகள் குறைந்து, 16,763.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 984.56 புள்ளிகள் குறைந்து, 56,699.03 புள்ளிகளாகவும், நிஃப்டி 281.20 புள்ளிகள் குறைந்து, 16,925.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 254 பங்குகள் ஏற்றத்திலும், 1932 பங்குகள் சரிவிலும், 48 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிசிஎஸ், லார்சன், கோல் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் லார்சன், டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இந்தஸ்இந்த் வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.இதில் டாப் கெயினர்களாக எந்த நிறுவனங்களும் இல்லை.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

9.39 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1111.17 புள்ளிகள் குறைந்து, 56,572.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 332.95 புள்ளிகள் குறைந்து, 16,873.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+