புராபிட் செய்யும் முதலீட்டாளார்கள்.. 59,000 கீழாக வர்த்தகமாகும் சென்செக்ஸ்..!

இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டு இருந்தாலும், தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.

இது முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்வதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தற்போதைக்கு சந்தையானது சரிவினைக் கண்டாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

வர்த்தகர்கள் கவனம்

வர்த்தகர்கள் கவனம்

அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பத்திர சந்தையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பத்திரம் வங்குதல் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் அதன் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளும் வரலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 212.89 புள்ளிகள் குறைந்து, 58,803 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 180.90 புள்ளிகள் குறைந்து, 17,404.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 352.16 புள்ளிகள் குறைந்து, 58,663.73 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 126.40 புள்ளிகள் குறைந்து, 17,458.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 650 பங்குகள் ஏற்றத்திலும், 1,333 பங்குகள் சரிவிலும், 127 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.

குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் 3% மேலாகவும், நிஃப்டி பிஎஸ்இ 1% மேலாகவும் சரிவில் காணப்படுகின்றது.
இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐடிசி, ஹெச்.சி.எல் டெக், ஹெச்.யு.எல், டிவிஸ் லேப், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, ஹெச்.யு.எல், ஹெச்.சி.எல் டெக், கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் கார்ப், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடக்கத்தில் 33 பைசா குறைந்து, 73.81 ரூபாயாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 73.43 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

தற்போது சென்செக்ஸ் 20.88 புள்ளிகள் அதிகரித்து, 59,043.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8.40 புள்ளிகள் குறைந்து, 17,576.75 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+