தொடங்கியது போர்.. கிட்டதட்ட 1900 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. கிடைச்ச லாபமெல்லாம் போச்சு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த நிலையில், இன்று இன்னும் பலத்த சரிவில் காணப்படுகின்றது.

பொதுவாகவே எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்றால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும். அதிலும் தற்போது ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இது இன்னும் சர்வதேச சந்தைகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.

ஆரம்பத்திலேயே பெரும் இழப்பில் முதலீட்டாளர்கள்.. 2% வரை வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிஃப்டி..!ஆரம்பத்திலேயே பெரும் இழப்பில் முதலீட்டாளர்கள்.. 2% வரை வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிஃப்டி..!

 உக்ரைன்-  ரஷ்யா போர்

உக்ரைன்- ரஷ்யா போர்

உக்ரைன் எல்லையில் 1. 5 லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்து வைத்திருந்த ரஷ்யா, இன்று காலை உக்ரைன் மீது தாக்குதலை நடத்தும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பல வருடங்களாகவே அதிகரித்து வந்த பிரச்சனைக்கு மத்தியில், தற்போது மிகப்பெரிய மோதலாக மாறியுள்ளது. எப்படியும் போர் வரும் என்ற நிலையே இருந்து வந்த நிலையில் இந்த தாக்குதலால் பெரும் சேதங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சர்வதேச நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா இடையில் இருந்த பதற்றமான நிலைக்கு மத்தியில், பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பித்துள்ளன. இதனிடையே தற்போது போர் மூண்டுள்ளது. இது இன்னும் சர்வதேச அளவில் பெரும் பதற்றமான நிலையையே உருவாக்கியுள்ளது. இது பொருளாதார ரீதியாகவும் பலத்த சேதத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிபார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தைகளும் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் 1% மேலாக சரிந்தே முடிவடைந்துள்ளன. இதனையடுத்து ஒரு ஆசிய சந்தைகள் பலவும் இன்று பலத்த சரிவில் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்திய சந்தைகளும் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 1108.54 புள்ளிகள் குறைந்து, 56,123.52 புள்ளிகளாகவும், நிஃப்டி 427 புள்ளிகள் குறைந்து, 16,636.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 1426.28 புள்ளிகள் குறைந்து, 55,805.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 407.80 புள்ளிகள் குறைந்து, 16,655.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதில் 270 பங்குகள் ஏற்றத்திலும், 1853 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ் பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக சரிவில் காணப்படுகின்றன. , பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி &  சென்செக்ஸ் குறியீடு

நிஃப்டி & சென்செக்ஸ் குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டாஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, இந்தஸ்இந்த் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன. இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, இந்தஸ் இந்த் வங்கி, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய  நிலவரம்

தற்போதைய நிலவரம்

9.57 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1861 புள்ளிகள் குறைந்து, 55,345 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 553.45 புள்ளிகள் குறைந்து, 16,509.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

opening bell: indices erased all Gaines, sensex again fall nearly 1900 points

opening bell: indices erased all Gaines, sensex again fall nearly 1900 points/தொடங்கியது போர்.. கிட்டதட்ட 1900 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. கிடைச்ச லாபமெல்லாம் போச்சு
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X