கரடியின் பிடியில் சந்தை.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

 

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தில் இந்த முறையும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

இது இன்னும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பதையே சுட்டி காட்டிகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகின்றது.

 சர்வதேச சந்தைகள் நிலவரம்

சர்வதேச சந்தைகள் நிலவரம்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் காணப்பட்டது. எனினும் சில குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்தாலும், தொடர்ந்து உள்நாட்டு முதலீடுகள் மதிப்பானது அதிகரித்து வருகின்றது. இது சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினை சற்றே குறைத்துள்ளது.

 முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பிப்ரவரி 10 நிலவரப்படி,என்.எஸ்.இ தரவுகள் 1732.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 2727.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. ஆக இது சந்தை பெரியளவில் ஏற்பட்டுள்ள சரிவினை தடுத்துள்ளது.

 தொடக்கம் எப்படி?
 

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 326.89 புள்ளிகள் குறைந்து, 58,599.14 புள்ளிகளாகவும், நிஃப்டி 42.50 புள்ளிகள் குறைந்து, 17,563.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 636.93 புள்ளிகள் குறைந்து, 58,289.10 புள்ளிகளாகவும், நிஃப்டி 194.10 புள்ளிகள் குறைந்து, 17,411.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 547 பங்குகள் ஏற்றத்திலும்,142 6 பங்குகள் சரிவிலும், 93 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. இதில் பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பிபிசிஎல், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி, மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ்,டெக் மகேந்திரா,விப்ரோ,டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

9.45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 723.71புள்ளிகள் குறைந்து,58,202.32 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 213.05 குறைந்து, 17,392.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

opening bell: indices open gap down amid weak cues, sensex crashed 700 points above

opening bell: indices open gap down amid weak cues, sensex crashed 700 points above/கரடியின் பிடியில் சந்தை.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!
Story first published: Friday, February 11, 2022, 9:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X