ரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி.. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் இந்திய சந்தைகள், இன்று தொடக்கத்திலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

கடந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் என்னவாகுமோ என கவலையும் முதலீட்டாளார்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பான இடம் நோக்கி நகர்த்திக் கொண்டுள்ளனர். இதனால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 211.96 புள்ளிகள் அதிகரித்து, 49,413.35 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38.30 புள்ளிகள் அதிகரித்து, 14,721.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் இந்திய சந்தைகள் ஏற்றத்திலேயே காணப்பட்டன. குறிப்பாக சென்செக்ஸ் 75.7 புள்ளிகள் அதிகரித்து, 49,277.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.95 புள்ளிகள் அதிகரித்து, 14,716.45 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி தவிர, மற்ற பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாடா கன்சியூமர் புராக்டக்ஸ், விப்ரோ, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது போட்டியாளரான ஏர்டெல்லுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், ரிலையன்ஸின் பங்கு விகிதமானது நல்ல ஏற்றத்துடன் காணப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 260.18 புள்ளிகள் அதிகரித்து, 49,461.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.30 புள்ளிகள் குறைந்து, 14,765.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+