இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் எப்போது தான் முடிவுக்கு வருமோ? என்ற அச்சம் நிலவி வந்தது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகள் சரிவினைக் கண்டு வந்தன. ஆனால் தற்போது நேட்டோ நாடுகளில் உறுப்பினராக சேர உக்ரைன் முயற்சி செய்யாது.
ரஷ்யாவுடன் சமாதானபேச்சு வார்த்தையில் ஈடுபட தயார். ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தொடர் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்..!

முதலீட்டாளர்கள் நிம்மதி
இதுவே முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியினை கொடுத்துள்ளது எனலாம். முடியவே முடியாதா? ஓயாது பெய்யும் குண்டு மழைகள் எப்போது நிறுத்தப்படும். மக்களின் அலறல் குரல்கள் எப்போது நிற்கும் என்ற பல கேள்விகளுக்கு மத்தியில், இதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச சந்தைகள்
உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. எனினும் பெரும்பாலான ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்
ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தின் மத்தியில், சர்வதேச அளவிலான வளர்ச்சி பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. மார்ச் 8 நிலவரப்படி, 8142.60 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 6489.59 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 601.09 புள்ளிகள் அதிகரித்து, 54,025.18 புள்ளிகளாகவும், நிஃப்டி 228 புள்ளிகள் அதிகரித்து, 16,241.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 142.42 புள்ளிகள் அதிகரித்து, 53,566.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 41.90 புள்ளிகள் அதிகரித்து, 16,055 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1465 பங்குகள் ஏற்றத்திலும், 310 பங்குகள் சரிவிலும், 57 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி பிஎஸ்இ , பிஎஸ்இ மெட்டல்ஸ், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதில் பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, சன் பார்மா, ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, நெஸ்டில், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்
தற்போது 9.56 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 266.66 புள்ளிகள் அதிகரித்து, 53,690.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 71.6 புள்ளிகள் அதிகரித்து, 16,085.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.