இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் 1700 புள்ளிகளுக்கும் மேலாக வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் 2520.19 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் 12.38 லட்சம் கோடி இழப்பினை முதலீட்டாளர்கள் கண்டுள்ளனர்.
சர்வதேச சந்தைகள் நிலவரம்
தொடர்ந்து கடந்த அமர்விலும் அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் இன்றும் சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தையானது சற்றே ஏற்றத்தில் காணப்பட்டாலும், மீண்டும் சரிவினைக் காணலாமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் நேற்று பங்கினை வாங்கிய நிலையில், இன்று அதனை புராபிட் புக்கிங் செய்யலாம்.
தொடரும் பதற்றம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அங்கு எந்த நேரத்திலும் போர் வரலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், பங்கு சந்தைகளும் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. அமெரிக்கா ரஷ்யாவினை எச்சரித்தும் கூட, அதனை செவி சாய்த்து ரஷ்யா கேட்டதாக தெரியவில்லை.
முதலீடுகள் வெளியேற்றம்
பிப்ரவரி 14 நிலவரப்படி, 4253.70கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 2170.29 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 113.19 புள்ளிகள் குறைந்து, 56,292.65 புள்ளிகளாகவும், நிஃப்டி சற்று அதிகரித்து, 16,844.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 353.58 புள்ளிகள் அதிகரித்து, 56,759.42 புள்ளிகளாகவும், நிஃப்டி 103.60 புள்ளிகள் அதிகரித்து, 16,946.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1295 பங்குகள் ஏற்றத்திலும், 750 பங்குகள் சரிவிலும், 71 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, டைட்டன் நிறுவனம், ஹெச்.யு,எல், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா,இந்தஸ்இந்த் வங்கி,என் டி பி சி, டாடா ஸ்டீல், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள விப்ரோ,டெக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம், ஹெச்.யு,எல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, என் டி பி சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
10.02 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 161.47 புள்ளிகள் அதிகரித்து, 56,567.31 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 9.45 புள்ளிகள் அதிகரித்து, 16,852.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications