நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, வர்த்தகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இந்திய சந்தைகள் இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் உச்சத்தினை தொட்ட நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் உச்சத்தில் காணப்பட்டன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இந்திய சந்தையானது தொடர்ந்து சந்தையில் ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்ய தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் தான் சந்தையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை காணத் தொடங்கியுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த அமர்வில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்களின் 1,843.09 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வெளியேறியுள்ளது. இதே உள் நாட்டு முதலீட்டாளார்கள் 1,680.73 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியேற்றியுள்ளனர். இதற்கிடையில் தான் சந்தையானது இன்றும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 418.49 புள்ளிகள் அதிகரித்து, 61,678.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 185.60 புள்ளிகள் அதிகரித்து, 18,452.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 286.63 புள்ளிகள் அதிகரித்து, 61,546.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.40 புள்ளிகள் அதிகரித்து, 18,349 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,455 பங்குகள் ஏற்றத்திலும், 415 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட்கேப், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐஓசி, பிபிசிஎல், ஓ.என்.ஜி.சி, கோடக் மகேந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, சன் பார்மா, பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 155.45 புள்ளிகள் குறைந்து, 61,104.51 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.75 புள்ளிகள் குறைந்து, 18,222.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
தற்போது பல நிறுவனங்களும் மூன்றாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டு வரும் நிலையில், பல்வேறு நிறுவன பங்குகள் உச்சம் தொட்டு வருகின்றன. இதற்கிடையில் இது மேலும் சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications