முதல் நாளே ஹேப்பி.. மீண்டும் களைகட்டும் சென்செக்ஸ்.. எல்லாம் முதலீட்டாளர்களுக்கு சாதகம் தான்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. இது மீண்டும் 53,000 புள்ளிகளை நோக்கி ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

நிபுணர்கள் சமீபத்தில் கூறியதை போல, எப்போதெல்லாம் சந்தை சரிகின்றதோ அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் சந்தை ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம். ஆக குறையும்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என்று கூறியிருந்தனர்.

ஆக கடந்த வாரத்தில் வரலாறு காணாத அளவுக்கு 53,000 புள்ளிகளுக்கு மேல் சென்ற சென்செக்ஸ், அதன் பிறகு சில சர்வதேச காரணிகளுக்கும் மத்தியில் சரியத் தொடங்கியது. அதோடு இது புராபிட் புக்கிங் காரணத்தினாலும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறினர்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் தொடர்ந்து வரலாற்று உச்சத்தில் இருந்து வருகின்றன. இது இந்திய சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படியொரு நிலையில் தான் தற்போது இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 260.20 புள்ளிகள் அதிகரித்து, 52,646.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.50 புள்ளிகள் அதிகரித்து, 15,763.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 296.96 புள்ளிகள் அதிகரித்து, 52,656.15 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. இதே நிஃப்டி 83.20 புள்ளிகள் அதிகரித்து, 15,773 புள்ளிகளாகவும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 1,672 பங்குகள் ஏற்றத்திலும், 304 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சியூமர் புராடக்ஸ், கிரசிம், மாருதி சுசூகி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிண்டால்கோ, ஹெச்.யு.எல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசூகி, இந்தஸிந்த் வங்கி, ஐசி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் பின்செர்வ், ஹெச்.யு.எல், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய சந்தை நிலவரம்

தற்போதைய சந்தை நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 240.53 புள்ளிகள் அதிகரித்து, 52,626.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 72.65 புள்ளிகள் அதிகரித்து, 15,762.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்றைய சந்தையில் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+