உக்ரைன் பதற்றம் தணிந்ததா? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் 1700 புள்ளிகளுக்கும் மேலாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், இன்றும் அதனை தொடர்ந்து சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களில் சென்செக்ஸ் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் பலமான சரிவினைக் கண்டு வந்தது.

இதற்கிடையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை மாறி, ரஷ்ய படைகள் பின் வாங்கியுள்ளன. உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய படைகளை குறைத்துள்ளதாக அதிபர் புடின் கூறியதையடுத்து, சென்செக்ஸ் மீண்டும் 3% மீண்டுள்ளது. எனினும் இன்னும் முழுமயாக படைகள் வெளியேறவில்லை என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் இருந்து வருகின்றது.

சர்வதேச சந்தைகள் நிலவரம்

சர்வதேச சந்தைகள் நிலவரம்

ஆக முந்தைய சில தினங்களாக இழந்து வந்த இழப்பீட்டினை கடந்த அமர்விலேயே முதலீட்டாளர்கள் மீட்டுள்ளனர். உக்ரைன் பிரச்சனை பூதாகரமான மாறலாம் என்ற அச்ச உணர்வு மாறி, தற்போது பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முன் வந்துள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்தது. அனைத்து குறியீடுகளும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதனையடுத்து இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.

தொடரும் பதற்றம்

தொடரும் பதற்றம்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அங்கு எந்த நேரத்திலும் போர் வரலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், பங்கு சந்தைகளும் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. அமெரிக்கா ரஷ்யாவினை எச்சரித்தும் கூட, அதனை செவி சாய்த்து ரஷ்யா கேட்டதாக தெரியவில்லை.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பிப்ரவரி 15 நிலவரப்படி, 2298.76 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 4411.60 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆக இதுவும் சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 258.67 புள்ளிகள் அதிகரித்து, 58,400.72 புள்ளிகளாகவும், நிஃப்டி 21.80 புள்ளிகள் அதிகரித்து, 17,374.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 301.55 புள்ளிகள் அதிகரித்து, 58,443.60 புள்ளிகளாகவும், நிஃப்டி 91 புள்ளிகள் அதிகரித்து, 17,443.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1457 பங்குகள் ஏற்றத்திலும், 390 பங்குகள் சரிவிலும், 70 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடு ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. எனினும் பெரியளவில் இதுவரை ஏற்றம் காணவில்லை. எனினும் பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதில் பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடுகள் மட்டும் 1% ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எம்&எம், அதானி போர்ட்ஸ், ஐஓசி, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், லார்சன், டாடா ஸ்டீல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

9.56 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 129.74 புள்ளிகள் குறைந்து, 58,012.31 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 25.6 புள்ளிகள் குறைந்து, 17,326.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று வேதாந்த் பேஷன் நிறுவனம் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.க் இன்று காலை தொடக்கத்தில் ஏற்றத்தில் சந்தையானது தொடங்கியிருந்தாலும், உக்ரைனில் இருந்து இன்னும் முழுமயாக படைகள் வெளியேறவில்லை என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+