தொடர் லாபத்தில் முதலீட்டாளர்கள்..இன்றும் ஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 55,600க்கு மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த வாரத்திலேயே பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்று இந்திய சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து உருமாறிய கொரோனா தாக்கமானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. எனினும் ஊக்கத் தொகை மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பலவற்றிற்கும் பத்திரம் வாங்குவது கைகொடுக்கும் என்ற நிலையில், அமெரிக்க சந்தைகள் மீண்டும் கடந்த அமர்வில் உச்சத்தினை தொட்டது.

இதனையடுத்து ஆசிய சந்தைகளும் இன்று காலையில் பட்டையை கிளப்பிக் கொண்டு ஏற்றத்தில் காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

முதலீட்டாளார்களுக்கு கவலையளிக்கும் விஷயம்

முதலீட்டாளார்களுக்கு கவலையளிக்கும் விஷயம்

எப்படியிருப்பினும் அதிகரித்து வரும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா, இன்னும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் அன்னிய முதலீடுகளும் குறைந்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி முதலீட்டாளர்களை நகர்த்துகிறது. ஆக நீண்டகால நோக்கில் கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்றத்தில் சந்தைகள்

ஏற்றத்தில் சந்தைகள்

கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகின்றது. எனினும் இதற்கு மத்தியிலும் நிதி ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

 இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

எனினும் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 69.08 புள்ளிகள் குறைந்து, 55,486.71 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 14 புள்ளிகள் அதிகரித்து, 16,510.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 148.74 புள்ளிகள் அதிகரித்து, 55,704.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 57.30 புள்ளிகள் அதிகரித்து, 16,503.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்.எ.சி.ஜி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோடக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, பஜாஜ் பின்செர்வ், டெக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்து, 74.10 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.21 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 129.91 புள்ளிகள் அதிகரித்து, 55,685.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 48.25 புள்ளிகள் அதிகரித்து, 16,540.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+