நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை போல சந்தைகள் சரிவில் தான் தொடங்கின.
அமெரிக்க சந்தைகள் தடுமாற்றம் கண்ட நிலையில், அதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் 2 மாத குறைந்த அளவில் காணப்பட்டன. இது மிக மோசமான வார சரிவு என்றும் கூறப்படுகிறது..
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக உருமாற்றம் அடைந்த கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மத்திய அரசு 8 மாநிலங்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
இதற்கிடையில் மீண்டும் பொருளாதாரம் மீண்டு வருவதில் சிக்கலை, இந்த தாக்கம் ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் உள்ள சர்வதேச காரணிகளும் சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வார இறுதியாதலால் சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இது சிறு முதலீட்டாளர்கள், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 39.30 புள்ளிகள் அதிகரித்து, 52,608.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 53.50 புள்ளிகள் குறைந்து, 15,674.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து சென்செக்ஸ் 193.09 புள்ளிகள் குறைந்து, 52,375.85 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. இதே நிஃப்டி 61.40 புள்ளிகள் குறைந்து, 15,666.50 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 1,053 பங்குகள் ஏற்றத்திலும், 725 பங்குகள் சரிவிலும், 72 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான இன்டெக்ஸ்கள் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டிவிஸ் லேப், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி, ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.ச, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய சந்தை நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 281.69 புள்ளிகள் குறைந்து, 52,287.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 77.75 புள்ளிகள் குறைந்து, 15,650.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications