நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் காணப்படுகிறது.
ஆய்வாளர்கள் மூன்றாவது அலை குறித்தான எச்சரிக்கையை விடுத்து வரும் நிலையில், இதனால் இனி எந்த மாதிரியான தாக்கம் இருக்க போகிறதோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம்
இதற்கிடையில் அமெரிக்காவின் 2 நாள் ஃபெடரல் வங்கி கூட்டத்தின் முதல் நாள் இன்று தொடங்கவுள்ளது. இது சந்தையில் பெரியளவிலான மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதாரத்தினை மீட்க முக்கிய அறிவிப்புகள் வருமா? என்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்
ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட அலையினால் பல லட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் சற்றே ஆறுதல் அடையும் விதமாக மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். எனினும் மூன்றாவது அலையின் தாக்கம் எப்படியிருக்குமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அன்னிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 259.30 புள்ளிகள் அதிகரித்து, 52,838.06 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.40 புள்ளிகள் அதிகரித்து, 15,776.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தொடங்கியது. சென்செக்ஸ் 209.12 புள்ளிகள் குறைந்து, 52,369.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 67.80 புள்ளிகள் குறைந்து, 15,678.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1160 பங்குகள் ஏற்றத்திலும், 817 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, டிவிஸ் லேப், பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமஸ் புராடக்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.யு.எல், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், நெஸ்டில், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 307.93 புள்ளிகள் குறைந்து, 52,270.83 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 89.15 புள்ளிகள் குறைந்து, 15,657.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications