கொடுத்த லாபமெல்லாம் போச்சு.. கடைசி நாளில் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. ஏன்?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டும் விதமாக இராண்டாவது வாரமாக, வேலையில்லாதோர் நலன் குறித்தான தரவானது சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. எனினும் சர்வதேச அரசியல் பதற்றம், பணவீக்கம் உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவிலேயே முடிவடைந்தது.

இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய சந்தையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 13 பைசா குறைந்து, 76.28 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 76.15 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்தானது சந்தையில் சற்று குறைந்து வரும் நிலையில், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

ஏப்ரல் 21 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 713.69 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 2823.43 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 227.79 புள்ளிகள் அல்லது 0.39% குறைந்து, 57,683.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 134.30 புள்ளிகள் குறைந்து, 17,258.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 545.85 புள்ளிகள் அல்லது 0.94% குறைந்து, 57,365.83 புள்ளிகளாகவும், நிஃப்டி 165.80 புள்ளிகள் குறைந்து, 17,226.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 859 பங்குகள் ஏற்றத்திலும், 1100 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இன்று எல் & டி டெக், ஹெச் சி எல் டெக், சியாண்ட், ஐசிஐசிஐ லம்பார்டு, ராலிஸ், ஜே.எஸ்.டபள்யூ எனர்ஜி, டிவிஎஸ் மோட்டார், ரயில்டெல் கார்ப் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன. இது தவிர ஆதித்யா பிர்லா மணி, ஹிந்துஸ்தான் ஜிங்க், சுந்தரம் பாஸ்ட்னெர்ஸ், டாடா மெட்டாலிஸ், தேஜஸ் நெட்வொர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இன்று வெளீயாகவுள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி பிஎஸ்இ தவிர, மற்ற அனைத்து குறியீடுகளுமே சரிவில் தான் காணப்படுகின்றன. நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. எனினும் மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாகவே சரிவில் காணப்படுகின்றன.

 

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எம்&எம், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, எம் & எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இந்தஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

9.35 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 517.77 புள்ளிகள் குறைந்து, 57,393.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 165.7 புள்ளிகள் குறைந்து, 17,226.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+