சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

அதெல்லாம் சரி? எதனால் இந்த ஏற்றம், இனி எப்படி இருக்கும் இன்று காலை தொடக்கத்தில் எப்படி இருந்தது. தற்போதைய நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

என்ன காரணம்

என்ன காரணம்

சந்தைக்கு சாதகமாக பல சர்வதேச காரணிகள் இருந்தாலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதனை கட்டுப்படுத்த வல்லுனர்களும், பல்வேறு முக்கிய தரப்பினரும் முழு லாக்டவுன் ஒன்றே ஆயுதம் என்று கூறிவருகின்றனர். ஏனெனில் நாடு முழுவதும் தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அதோடு ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கு உள்ள கடைசி ஆயுதம் இதுவே என்றும் கூறி வருகின்றனர்.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 488.99 புள்ளிகள் அதிகரித்து, 49,166.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து, 14,671.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 172.65 புள்ளிகள் அதிகரித்து, 48,850.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54.40 புள்ளிகள் அதிகரித்து, 14,672.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1130 பங்குகள் ஏற்றத்திலும், 271 பங்குகள் சரிவிலும், 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால்கேப், பிஎஸ்இ டெக் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், எஸ்பிஐ, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பார்தி ஏர்டெல், டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி, ஐடிசி, மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.86 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.91 ரூபாயாகும்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 11.97 புள்ளிகள் அதிகரித்து, 48,687.92 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.10 புள்ளிகள் அதிகரித்து, 14,636.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+