இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றன. கடந்த வாரத்திலேயே தொடர்ந்து சரிவினைக் கண்ட சந்தைகள், நடப்பு வாரத்திலும் சரிவினைக் காணுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவினைக் கண்டு முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் அனைத்தும் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்டன.
இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. அதிலும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சந்தையானது பலத்த சரிவில் காணப்படுகின்றது.
இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி

முதலீடுகள் வரத்து?
என் எஸ் இ தரவுகளின் படி, ஜனவரி 21 அன்று தொடர்ச்சியாக இந்திய சந்தையில் இருந்து 5வது நாளாக முதலீடுகள் வெளியேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 3148.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 269.36 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்த போக்கு வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி
நடப்பு வாரத்தில் இந்திய சந்தையில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், சந்தையில் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக ஓமிக்ரான் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று குறைந்து காணப்பட்டது. குறிப்பாக 139.91 புள்ளிகள் குறைந்து, 59,177.09 புள்ளிகளாகவும், நிஃப்டி 37.30 புள்ளிகள் குறைந்து, 17,654.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 181.51 புள்ளிகள் குறைந்து, 58,855.67 புள்ளிகளாகவும், நிஃப்டி 61.70 புள்ளிகள் குறைந்து, 17,555.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1126 பங்குகள் ஏற்றத்திலும், 1175 பங்குகள் சரிவிலும், 131 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப் 3% மேலாக சரிவிலும், இதே,பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப்,பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ்,பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே பிஎஸ்இ ஹெல்த்கேர்,பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்றவை 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஓ.என்.ஜி.சி, சன் பார்மா, பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டிவிஸ் லேப், பஜாஜ் பைனான்ஸ், ஹிண்டால் கோ, விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி, என்.டி.பி.சி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, பஜாஜ் பின்செர்வ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்
தற்போது 10.36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 684.23 புள்ளிகள் குறைந்து,58,58352.95 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 223.15 புள்ளிகள் குறைந்து, 17,394 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து சரிவினை கண்டு வரும் நிலையில் 58,500 புள்ளிகளுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.