ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்.. இன்று எப்படியிருக்கும்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி பிறகு சரிவினைக் கண்டன. எனினும் தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் தொடர்ந்து உச்சத்தினை தொட்ட நிலையில், இந்த வாரத்தில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், 2வது நாளாக இன்றும் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

அன்னிய முதலீடுகளின் வரத்து சந்தையில் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு வெளியேறி வருகின்றனர்.

செப்டம்பர் 20 அன்று அன்னிய முதலீடு வரத்தானது 92.54 கோடி ரூபாயாக இருந்த நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,626.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

சர்வதேச சந்தைகள் சரிவு

சர்வதேச சந்தைகள் சரிவு

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்க சந்தைகள் சரிவினைக் கண்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் இன்று காலை அழுத்தத்தில் காணப்பட்டன. குறிப்பாக டவ் ஜோன்ஸ், நாஸ்டாக் காம்போசைட் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. எனினும் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கம், தடுப்பூசி எண்ணிக்கை மற்றும் பல தடுப்பு நடவடிக்கைகளும் கண்கானிக்கப்பட்டு வருகின்றன.

 

சந்தை ஏற்றம் காணலாம்

சந்தை ஏற்றம் காணலாம்

எனினும் தற்போதைக்கு சந்தையானது சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அன்னிய முதலீடுகள் வரத்து, நிறுவனங்கள் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், பல்வேறு காரணிகளும் சாதகமாக வந்து கொண்டுள்ளன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 3.24 புள்ளிகள் அதிகரித்து, 58,494.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.10 புள்ளிகள் அதிகரித்து, 17,453 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 278.98 புள்ளிகள் அதிகரித்து, 58,769.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.80 புள்ளிகள் குறைந்து, 17,470.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,084 பங்குகள் ஏற்றத்திலும், 709 பங்குகள் சரிவிலும், 95 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, ஹெச்.யு.எல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.யு.எல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், என்.டி.பி.சி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று குறைந்து, 73.81 ரூபாயாக தொடங்கியுள்ளது.இது முந்தைய அமர்வில் 73.74 ரூபாயாக முடிவடைந்தது.

தற்போது சென்செக்ஸ் 62.23 புள்ளிகள் அதிகரித்து, 58,553.16 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.1 புள்ளிகள் அதிகரித்து, 17,416 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+