நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டிருந்த நிலையில், ஏற்றம் கண்டு இருப்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.
இது தொடக்கத்திலேயே பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம், பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது.
இதற்கிடையில் தொடக்கத்தில் 200 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்டு காணப்பட்ட சந்தைகள், தற்போது குறைந்து பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 252.57 புள்ளிகள் அதிகரித்து, 48,971.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23.80 புள்ளிகள் அதிகரித்து, 14,658.00 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 267.74 புள்ளிகள் அதிகரித்து, 48,986.26 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.30 புள்ளிகள் அதிகரித்து, 14,718.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1313 பங்குகள் ஏற்றத்திலும், இதே 195 பங்குகள் சரிவிலும், 39 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யு.பி,எல்., ஹிண்டால்கோ, எஸ்பிஐ, பிபிசிஎல், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், எம்&எம், ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய்
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 73.90 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.93 ரூபாயாகவும் முடிவடைந்திருந்தது. இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 19.94 புள்ளிகள் அதிகரித்து, 48,738.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 11.55 புள்ளிகள் அதிகரித்து, 14,645.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications