லாபமா.. நஷ்டமா.. பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் சென்செக்ஸ்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

மீடியம் டெர்மில் சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்திலேயே காணப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் மூன்றாவது கொரோனா அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. இதனால் சந்தையில் பெரிய மாற்றமின்றி, ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகி வருகின்றது.

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவு மற்றும் உற்பத்தி குறித்தான டேட்டாக்கள் இன்று வெளியாகவுள்ளது. இதனால் சந்தையானது பெரிய மாற்றமின்றி காணப்படுகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 276.66 புள்ளிகள் அதிகரித்து, 52,595.26 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று 23.50 புள்ளிகள் அதிகரித்து, 15,703.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 41.95 புள்ளிகள் அதிகரித்து, 52,360.50 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 17.70 புள்ளிகள் அதிகரித்து, 15,697.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1226 பங்குகள் ஏற்றத்திலும், இதே 427 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டிவிஸ் லேப், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஈச்சர் மோட்டர்ஸ், டிசிஎஸ், பிரிட்டானியா, ஹெச்.யு.எல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ். என்.டி.பி.சி, எம் & எம், பகாக் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஹெச்.யு.எல், பஜாஜ் பின்செர்வ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து, 74.71 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமரிவில் 74.54 ரூபாயாக தொடங்கியுள்ளது. தற்போது சென்செக்ஸ் 13.85 புள்ளிகள் குறைந்து, 52,304.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.10 புள்ளிகள் குறைந்து, 15,677.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+