வார இறுதி வர்த்தக நாளில் என்ன நிலவரம்.. சென்செக்ஸ் 53,100-க்கு மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், இன்று புராபிட் காரணமாக மீடியம் டெர்மில் சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்திலேயே காணப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எனினும் மூன்றாவது கொரோனா அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. இது பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது.. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 111.99 புள்ளிகள் அதிகரித்து, 53,270.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 36.20 புள்ளிகள் அதிகரித்து, 15,960.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1226 பங்குகள் ஏற்றத்திலும், இதே 427 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சன் பார்மா, ஐடிசி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், பார்தி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஈச்சர் மோட்டர்ஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, ஐடிசி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 74.54 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகியுள்ளது. தற்போது சென்செக்ஸ் 21.42 புள்ளிகள் குறைந்து, 53,154.23 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 1.45 புள்ளிகள் அதிகரித்து, 15,925.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+