பல நாட்களுக்கு பிறகு காளையின் ஆதிக்கம்.. முதலீட்டாளர்கள் பெரும் நிம்மதி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்திருப்பது ஷார்ட் கவரிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் இந்த ஏற்றம் முடிவிலும் இருக்குமா? என்பதும் சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகின்றது.

உக்ரைன்- ரஷ்யா பதற்றம்

உக்ரைன்- ரஷ்யா பதற்றம்

உக்ரைன் எல்லையில் 1. 5 லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையில் பெரும் பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைனுக்குள் நுழைய ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்ட புடினுக்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடையையும் விதித்துள்ளன. இதற்கிடையில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமானது, சர்வதேச அளவில் பெரும் பதற்றமான நிலையையே உருவாக்கியுள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பிப்ரவரி 22 நிலவரப்படி, 3245.52 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 4108.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தைகளும் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் 1% மேலாக சரிந்தே முடிவடைந்துள்ளன. இதனையடுத்து ஒரு ஆசிய சந்தைகள் சரிவில் தொடங்கியிருந்தாலும், இந்திய சந்தைகள் உள்பட சில ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 80.39 புள்ளிகள் அதிகரித்து, 57,381.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 26.20 புள்ளிகள் அதிகரித்து, 17,118.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 304.15 புள்ளிகள் அதிகரித்து, 57,607.83 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.30 புள்ளிகள் அதிகரித்து, 17,187.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1388 பங்குகள் ஏற்றத்திலும், 554 பங்குகள் சரிவிலும், 60 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, அதானி போர்ட்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, நெஸ்டில், ஹெச்.யு.எல், டிவிஸ் லேப், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் கோடக் மகேந்திரா, இந்தஸ்இந்த் வங்கி, டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், ஹெச்.யு.எல், லார்சன், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

10.17 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 231.43 புள்ளிகள் அதிகரித்து, 57,532.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 68.6 புள்ளிகள் அதிகரித்து, 17,160.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+