ரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி.. சற்றே ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் 10 மணிக்கு பேசவுள்ளார்.

அதோடு தற்போது பல நிறுவனங்களின் இறுதி காலாண்டு அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் என்பது மேலும் சரிவுக்கு வழிவகுக்குமோ என்ற நிலையும் இருந்து வருகின்றது. இதனால் ஆசிய சந்தைகள் பலவும் சற்று சரிவினைக் கண்டு வருகின்றன.

வட்டி விகிதம் அதிகரிக்குமோ?

வட்டி விகிதம் அதிகரிக்குமோ?

அதோடு அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிப்பு பற்றிய பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், அதுவும் சந்தையின் தடுமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் வட்டி விகிதம் அதிகரிக்கும்பட்சத்தில் முதலீடுகள் வெளியேற்றப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் இன்று காலை 10 மணியளவில் பேச உள்ளார். இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 397.51 புள்ளிகள் அதிகரித்து, 48,651.02 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 134.90 புள்ளிகள் அதிகரித்து, 14,631.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 263.50 புள்ளிகள் அதிகரித்து, 48,517.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.90 புள்ளிகள் அதிகரித்து, 14,570.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1046 பங்குகள் ஏற்றத்திலும், 209 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, யுபிஎல். ஐஓசி, கிரசிம், டாடா கன்சியூமர் புராக்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு


இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, இந்தஸிந்த் வங்கி, என்.டிபி.சி, டைட்டன் நிறுவனம், அல்ட்ராஎக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, நெஸ்டில், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போது சென்செக்ஸ் 183.01 புள்ளிகள் அதிகரித்து, 48,449.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.55 புள்ளிகள் அதிகரித்து, 14,556.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
சர்வதேச காரணிகள் பலவும் நிலையற்றதாக உள்ள நிலையில், கொரோனாவின் தாக்கமும் உச்சத்தில் உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இனி ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+