இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சில அமர்வுகளாகவே சரிவினைக் கடு வந்தது. எனினும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஏற்றத்தினை காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.
இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். ஏனெனில் சந்தையானது திரும்பவும் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதனை போலவே தொடர்ந்து சந்தையும் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் பெரியளவில் மாற்றம் காணாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் காணப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.
கவனிக்க வேண்டிய காரணிகள்
இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் ஐபிஓக்கள், அன்னிய முதலீடுகள் வரத்து உள்ளிட்ட பலவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன. குறிப்பாக வரவிருக்கும் நாட்களில் வாகன விற்பனை குறித்தான அறிவிப்புகள் வெளியாவிருக்கும் நிலையில், அதுவும் சந்தையில் எதிரொலிக்கலாம்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 200.36 புள்ளிகள் அதிகரித்து, 59,507.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.30 புள்ளிகள் அதிகரித்து, 17,728 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 402.18 புள்ளிகள் அதிகரித்து, 59,709.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17,800 புள்ளிகள் அதிகரித்து, 17,821.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,214 பங்குகள் ஏற்றத்திலும், 395 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் குறியீடுகள் கிட்டதட்ட 2% ஏற்றத்திலும், மற்ற குறியீடுகள் அனைத்தும் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், ஹிண்டால் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், டாடா மோட்டார்ஸ், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், ஹெச்.யு.எல், எம்& எம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 355.27 புள்ளிகள் அதிகரித்து, 59,662.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.75 புள்ளிகள் அதிகரித்து, 17,768.15 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இது இன்னும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இது வரவிருக்கும் தரவுகள், காலாண்டு முடிவுகள், ஐபிஓ என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications