எழுச்சி பெற்ற பங்கு சந்தைகள்.. முதல் நாளே ஏற்றம் தான்.. ரிலையன்ஸ், டிசிஎஸ் கவனிக்க வேண்டியவை..!

இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்தது. இது இன்றும் தொடர்ந்து ஏற்றத்தினை காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.

இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். ஏனெனில் சந்தையானது திரும்பவும் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதனை போலவே தொடர்ந்து சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்றே தடுமாற்றத்தில் இருந்தாலும், ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய பங்கு சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவினைக் கண்டிருந்தாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது மூன்று வருட உச்சத்தில் காணப்படுகின்றன. இதனால் சந்தைக்கு இது சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

தொடர்ந்து சந்தையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது உச்சம் தொடலாம் என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தை சரிவுக்கு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 410.59 புள்ளிகள் அதிகரித்து, 60,469.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.80 புள்ளிகள் அதிகரித்து, 17,965 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 100.25 புள்ளிகள் சரிந்து, 59,958.81 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23.20 புள்ளிகள் குறைந்து, 17,872 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,617 பங்குகள் ஏற்றத்திலும், 499 பங்குகள் சரிவிலும், 120 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்பட்டன. நிஃப்டி பிஎஸ்இ, பேங்க் நிஃப்டி குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், நிஃப்டி ஆட்டோ 2% மேலாக ஏற்றத்திலும் காணப்பட்டன. மற்றவை 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, மாருதி சுசூகி, என்.டி.பி.சி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டிவிஸ் லேப்ஸ், டெக் மகேந்திரா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, என்.டி.பி.சி, கோடக் மகேந்திரா வங்கி, பவர் கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிசிஎஸ், டெக் மகேந்திரா, பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, சற்று அதிகரித்து, 75.103 ரூபாயாக காணப்படுகின்றது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 196.36 புள்ளிகள் அதிகரித்து, 60,255.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 71.50 புள்ளிகள் அதிகரித்து, 17,966.70 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+