முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி..!
ஓமிக்ரான் அச்சத்திற்கு மத்தியில், பல்வேறு சர்வதேச காரணிகளூம் சந்தைக்கு எதிராக இருந்த நிலையில் கடந்த சில அமர்வுகளாக சற்றே ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது.
எனினும் வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த சந்தைகள் இன்று சற்று ஏற்றம் கண்டிருப்பது ஆறுதல் கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் அதிகரிக்கலாம்
குறிப்பாக விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. அப்படி அதிகரிக்கப்படும் பட்சத்தில் விரைவில் இந்திய சந்தையில் உள்ள முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வருகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது சந்தையில் ஏற்படுத்தும் சரிவினைக் குறைக்கின்றது. குறிப்பாக டிசம்பர் 15 நிலவரப்படி FII விகிதமானது, 3,407.04 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே DII விகிதமானது 1,553.01 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
தொடக்கம்
இன்று காலை ப்ரீ ஒபனிங்க் சந்தையிலேயே சென்செக்ஸ் 319.26 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 58,107.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26 புள்ளிகள் அதிகரித்து, 17,247.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 467.34 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 58,107.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 134.10 புள்ளிகள் அதிகரித்து, 17,355.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதற்கிடையில் 1,632 பங்குகள் ஏற்றத்திலும், 268 பங்குகள் சரிவிலும், 44 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி மெட்டல்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இஎஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், கிரசிம், விப்ரோ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப், சன் பார்மா, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது (10.40 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 160.90 புள்ளிகள் அதிகரித்து, 57,948.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 48.15 புள்ளிகள் அதிகரித்து, 17,269.55 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. ஐடி பங்குகள் இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றன.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications