குதூகலத்தில் முதலீட்டாளர்கள்..முதல் நாளே களைகட்டிய சந்தை..சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வந்த நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து பலமான சரிவினைக் கண்டு வந்தன.

எனினும் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை, நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.

ஏன் இந்த ஏற்றம்

ஏன் இந்த ஏற்றம்

அதோடு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக பலத்த சரிவினைக் கண்ட நிலையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்க இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஷார்ட் கவரிங்களும் பலமாக இருந்ததால், அவைகளும் புராபிட் புக்கிங் செய்யலாம். இதுவும் இன்றைய எழுச்சிக்கு காரணமாக இருக்கலாம்.எது எப்படியோ இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

என்.எஸ்.இ தரவுகளின் படி, ஜனவரி 28 அன்று 5045.34 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 3358.67 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். இதுவும் சந்தையின் ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இதே கடந்த ஜனவரி 28 வரையிலான மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் 28,258.82 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர்.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்திலேயே ஆசிய சந்தைகள் பலவும் இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்பட்டன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது பங்குகளை குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 994.74 புள்ளிகள் அதிகரித்து, 58,194 புள்ளிகளாகவும், நிஃப்டி 123.90 புள்ளிகள் அதிகரித்து, 17,225.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 662.75 புள்ளிகள் அதிகரித்து, 57,862.98 புள்ளிகளாகவும், நிஃப்டி 199.50 புள்ளிகள் அதிகரித்து, 17,301.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1736 பங்குகள் ஏற்றத்திலும், 439 பங்குகள் சரிவிலும், 107 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் குறியீடுகள் 2% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ்,பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், பேங்க், பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி 50 உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்றவை 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, டிவிஸ் லேப், விப்ரோ, இன்ஃபோசிஸ், பிபிசிஎல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ,டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

10.00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 659.16 புள்ளிகள் அல்லது 1.15% அதிகரித்து, 57,859.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 201.8 புள்ளிகள் அல்லது 1.18 % அதிகரித்து, 17,303.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+