பச்சை கொடி காட்டிய சென்செக்ஸ்.. நிஃப்டி 15,700 மேல் வர்த்தகம்..லாபம் தான்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. இது இரண்டாவது காலாண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த டேட்டா சாதகமாக வரலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏற்றம் கண்டு வருகின்றன.

இதையடுத்து சீனாவின் ஜூன் மாத வர்த்தகம் தொடர்பான டேட்டா இன்று வெளியாகவுள்ள நிலையில், ஆசிய சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதையடுத்து இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஒரு புறம் இரண்டாம் கட்ட பரவல் என்பது தொடர்ந்து குறைந்து வந்தாலும், உருமாறிய கொரோனாவின் தாக்கம் என்பது சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் சந்தைகள் தற்போது பெரியளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதோடு சில நிறுவனங்களின் பொது பங்கு வெளியீடும் இம்மாதத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், அதுவும் சந்தையில் எதிரொலிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. .

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் காணப்பட்டன. சென்செக்ஸ் 322.2 புள்ளிகள் அதிகரித்து, 52,694.89 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 101.40 புள்ளிகள் அதிகரித்து, 15,794.00 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட சில குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. மற்றவை பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிண்டால்கோ, ஹெச்.டி.எஃப்.சி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி போர்ட்ஸ், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டாடா கன்சியூமர் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய சந்தை நிலவரம்

தற்போதைய சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் விலையானது முந்தைய அமர்வின் சரிவு விலையில் இருந்து ஏற்றம் கண்டு வந்துள்ளது. எனினும் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவல் தாக்கத்தினால் சந்தையில் தேவையானது மீண்டும் குறையலாமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.


தற்போது சென்செக்ஸ் 245.09 புள்ளிகள் அதிகரித்து, 52,617.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.40 புள்ளிகள் அதிகரித்து 15,766 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+