ஓமிக்ரான் அச்சம், வட்டி விகித மாற்றம், பணவீக்கம் என பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
அதிலும் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த சந்தைகள் இன்றும் வீழ்ச்சி கண்டிருப்பது, நீண்டகால நோக்கில் குறைந்த விலையில் பங்குகளை வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகின்றது.
வட்டி விகிதம் அதிகரிக்கலாம்
எதிர்பார்ப்பினை போல அதிகரித்துள்ள பணவீக்கத்தின் மத்தியில் பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அதிகரிக்கப்படும்பட்சத்தில் விரைவில் இந்திய சந்தையில் உள்ள முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வரும் நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 16 நிலவரப்படி FII விகிதமானது, 1,468.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் DII விகிதமானது 1,553.15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளது. ஆக இது சந்தையில் பெரியளவிலான சரிவினை தடுத்துள்ளது எனலாம்.
தொடக்கம்
இன்று காலை ப்ரீ ஒபனிங்க் சந்தையிலேயே சென்செக்ஸ் 13.04 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 57,914.18 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.90 புள்ளிகள் குறைந்து, 17,191.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 41.45 புள்ளிகள் குறைந்து, 57,859.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10.70 புள்ளிகள் குறைந்து, 17,237.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதற்கிடையில் 1,076 பங்குகள் ஏற்றத்திலும், 786 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றாமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி பிஎஸ்இ,பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவிலும், நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி மெட்டல்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல். டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், டாடா மோட்டார்ஸ்,டைட்டன் நிறுவனம், சிப்லா, ரிலையன்ஸ், சிப்லா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், சிப்லா, ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது (10.55 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 731.99 புள்ளிகள் குறைந்து, 57,139.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 228.85 புள்ளிகள் குறைந்து, 17,019 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. மற்ற பங்குகளை காட்டிலும் இன்று ஐடி துறை சார்ந்த பங்குகள் இன்று டாப் கெயினர்களாக உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications