நேற்றும் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. ஏனெனில் புராபிட் புக்கிங் காரணமாக சந்தையில் அழுத்தம் அதிகமாக காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்பட்டாலும், இன்று ஆசிய சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 189.42 புள்ளிகள் குறைந்து, 49,576.52 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 149.50 புள்ளிகள் குறைந்து, 14,745.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 456.30 புள்ளிகள் குறைந்து, 49,309.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 126.90 புள்ளிகள் குறைந்து, 14,768 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 481 பங்குகள் ஏற்றத்திலும், இதே 836 பங்குகள் சரிவிலும், 62 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஒ என் ஜி சி, விப்ரோ, கோல் இந்தியா, டிவிஎஸ் லேப், ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஒ என் ஜி சி, என் டி பி சி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், இன்ஃபோசிஸ், பார்தி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி, ஹெச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 18 பைசா குறைந்து, 74.22 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.04 ரூபாயாகவும் முடிவடைந்தது. இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 415.14 புள்ளிகள் குறைந்து, 49,350.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 100.80 புள்ளிகள் குறைந்து, 14,794.10 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications