இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் மீண்டும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன.
உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில், சர்வதேச அளவிலான பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
இதற்கிடையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் உச்சம் தொட்டு வருகின்றது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது பொருளாதார வீழ்ச்சியினை பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தைகள்
உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகளும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
ரஷ்யா - உக்ரைன் பதற்றம், சர்வதேச அளவிலான வளர்ச்சி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், தொடர்ந்து பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. மார்ச் 7 நிலவரப் படி, 7482.08 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 5331.03 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 25.53 புள்ளிகள் குறைந்து, 52,817.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 89.90 புள்ளிகள் குறைந்து, 15,773.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 85.71 புள்ளிகள் குறைந்து, 52,757.04 புள்ளிகளாகவும், நிஃப்டி 33.20 புள்ளிகள் குறைந்து, 15,830 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1238 பங்குகள் ஏற்றத்திலும், 549 பங்குகள் சரிவிலும், 91 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ மெட்டல்ஸ் 2% மேலாகவும், பேங்க் நிஃப்டி 1% மேலாகவும் சரிவில் காணப்படுகின்றன. நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, டிசிஎஸ், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், மாருதி சுசுகி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, டிசிஎஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இன்று காலை தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய சந்தையானது, 10.13 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 152.84 புள்ளிகள் அதிகரித்து, 52,995.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 25.25 புள்ளிகள் அதிகரித்து, 15,888.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications