1,000 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் சென்செக்ஸ்.. பெரும் நஷ்டம்..!

கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், அதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்றும் சரிவில் காணப்படுகின்றது.

இது ஓமிக்ரான் அச்சம், வட்டி விகித மாற்றம், பணவீக்கம் என பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சரிவில் காணப்படுகின்றது.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.கிட்டதட்ட 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், இது வரவிருக்கும் மாதங்களில் மேற்கொண்டு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வரும் நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 17 நிலவரப்படி FII விகிதமானது, 2,069.90 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் DII விகிதமானது 1,478.52 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.

தொடக்கம்

தொடக்கம்

இன்று காலை ப்ரீ ஒபனிங்க் சந்தையிலேயே சென்செக்ஸ் 362.40 புள்ளிகள் குறைந்து 56,649.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 198.80 புள்ளிகள் குறைந்து, 16,786.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 664.78 புள்ளிகள் குறைந்து, 56,346.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 189.50 புள்ளிகள் குறைந்து, 16,795.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதற்கிடையில் 724 பங்குகள் ஏற்றத்திலும், 1,331 பங்குகள் சரிவிலும், 103 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப்ஸ், பிஎஸ்இ மிட் கேப்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவிலும்,பிஎஸ்இ மெட்டல்ஸ் 3% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன. பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஐடி உள்ளிட்ட பல குறியீடுகளூம் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பிபிசிஎல், எஸ்பிஐ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா பங்கு மட்டுமே டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (9.51 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 1,039.65 புள்ளிகள் குறைந்து, 55,972.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 317.95 புள்ளிகள் குறைந்து, 16,667.25 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. மற்ற பங்குகளை காட்டிலும் இன்று பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+