தொடர்ந்து அடி கொடுக்கும் சந்தை.. 2வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி..!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது.

இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், அதனால் ஏற்பட்டுள்ள பணவீக்கம், அமெரிக்காவின் முக்கிய மத்திய வங்கி நடவடிக்கைகள் என பலவும் கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.

இதற்கிடையில் கொரோனா பரவல் அச்சம், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தைகள் நிலவரம் என்ன?

சர்வதேச சந்தைகள் நிலவரம் என்ன?

தொடர்ந்து பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வந்த நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து காணப்பட்டது. எனினும் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

கடந்த ஏப்ரல் 11 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 1145.24 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 486.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 118.65 புள்ளிகள் குறைந்து, 58,845.92 புள்ளிகளாகவும், நிஃப்டி 96.20 புள்ளிகள் குறைந்து, 17,578.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 419.18 புள்ளிகள் குறைந்து, 58,545.39 புள்ளிகளாகவும், நிஃப்டி 123 புள்ளிகள் குறைந்து, 17,552 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1162 பங்குகள் ஏற்றத்திலும், 1031 பங்குகள் சரிவிலும், 109 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் டிசிஎஸ், டெல்டா கார்ப், ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மதர்சன், அல்ட்ராடெக், சன்டெக் ரியால்டி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப்,பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறறியீடுகள் 1% மேலாக சரிவிகும், பிஎஸ்இ மெட்டல்ஸ் 3% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, டிசிஎஸ், ஹெ.சி.எல் டெக், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், கிரசிம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, டிசிஎஸ், ஹெ.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி,ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல்,லார்சன், எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்றே சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது 10.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 467.07 புள்ளிகள் குறைந்து, 58,497.50 புள்ளிகளாகவும், நிஃப்டி 158.25 புள்ளிகள் குறைந்து, 17,516.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+