நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இது புராபிட் புக் காரணத்தினால் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதோடு அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து ஆசிய சந்தைகளும் சரிவில் முடிவடைந்துள்ளன.
மேலும் மூன்றாவது கொரோனா அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. இது பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இப்படி பல காரணிகளும் சந்தைக்கு எதிராகவே அமைந்துள்ளன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது.. குறிப்பாக சென்செக்ஸ் 144.11 புள்ளிகள் குறைந்து, 52,409.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 5.20 புள்ளிகள் குறைந்து, 15,747.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 104.33 புள்ளிகள் குறைந்து, 52,449.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 36.30 புள்ளிகள் குறைந்து, 15,716.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,305 பங்குகள் ஏற்றத்திலும், இதே 530 பங்குகள் சரிவிலும், 99 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இன்டெக்ஸ் குறியீடுகள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக குறைந்துள்ளது. மற்ற குறியீடுகள் 1% கீழாக குறைந்துள்ளன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஸ்ரீ சிமெண்ட்ஸ், பவர் கிரிப் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஹிண்டால்கோ, எம்&எம், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிப் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யு.எல், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எம்&எம், பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 74.88 ரூபாயாக தொடங்கியுள்ள நிலையில், தற்போது 74.93 ரூபாயாக சரிந்து வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்விலும் 74.88 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்செக்ஸ் 224.79 புள்ளிகள் குறைந்து, 52,328.61 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.15 புள்ளிகள் குறைந்து, 15,682.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications