கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வந்த இந்திய சந்தைகள், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன. இது வரலாற்று உச்சத்தினை தொட்டிருந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்ய தொடங்கியிருக்கலாம். இதனால் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சந்தை சற்று சரிவில் காணப்படுகின்றது. இதனால் புதிய உச்சத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், மீண்டும் சரிவினை கண்டு வருகின்றது சென்செக்ஸ், நிஃப்டி.
கடந்த அமர்வில் அமெரிக்க டாலரின் மதிப்பு மாத சரிவில் இருந்து சற்று மீண்டுள்ளது. இது ஐரோப்பா மற்றும் கனடா மத்திய வங்கி கூட்டங்களுக்கு வர்த்தகர்கள் முனைப்பு காட்டியதால் இந்த ஏற்றம் இருந்தது.
முதலீட்டாளார்கள் எதிர்பார்ப்பு
எனினும் இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டன. இதனையடுத்து இந்திய சந்தைகளும் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டன. இந்த வாரத்தில் சர்வதேச அளவில் நடக்கவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில், ஊக்கத்தொகைகள், வட்டி குறித்த நடவடிக்கைகள் இருக்கலாமோ என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
மேலும் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து உருமாறிய கொரோனா தாக்கமானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் ஊக்கத்தொகை பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையே உள்ளது. இதனால் சந்தையில் இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 192.01 புள்ளிகள் அதிகரித்து, 58.488.92 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.50 புள்ளிகள் அதிகரித்து, 17,380.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 111.94 புள்ளிகள் அதிகரித்து, 58,408.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 28.90 புள்ளிகள் அதிகரித்து, 17,406.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,224 பங்குகள் ஏற்றத்திலும், 510 பங்குகள் சரிவிலும், 103 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடு 1% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. மற்ற குறியீடுகள் அனைத்தும் 1% கீழாகவும் சரிவினைக் கண்டுள்ளது.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சியூமர் புராடக்ஸ், பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, எஸ்பிஐ, சன் பார்மா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமின்றி, 73.13 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.10 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 121.57 புள்ளிகள் குறைந்து, 58,170.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 42.6 புள்ளிகள் அதிகரித்து, 17,335.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications