இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தது. இதற்கிடையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சரிவில் ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் பெரியளவில் மாற்றம் காணாவிட்டாலும், சற்று சரிவில் தான் காணப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் இன்று சரிவில் காணப்படுகின்றன.
இது பரவி வரும் புதிய வகை கொரோனா பரவல், பல்வேறு நாடுகளின் தொழிற்துறை உற்பத்தி துறை குறித்தான தரவுகள், வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள், பணவீக்கம், அன்னிய முதலீடுகள் என பலவும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன.
கவனிக்க வேண்டிய காரணிகள்
இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் முக்கிய நிறுவனங்களின் ஐபிஓ, பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியல், பங்குகள் ஒதுக்கீடு, வட்டி விகித மாற்றம் குறித்த முடிவுகள் என பலவும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக வரவிருக்கும் நாட்களில் ஓமிக்ரான் குறித்தான அப்டேட்கள் என பலவும் சந்தையில் எதிரொலிக்கலாம்.
முதலீடு நிலவரம்
டிசம்பர் 3 நிலவரப்படி, தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்தானது 3,356.17 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் மத்தியில் 1648.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த போக்கு இன்றும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 22.22 புள்ளிகள் அதிகரித்து, 57,718.68 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 51.20 புள்ளிகள் குறைந்து, 17,145.50 புள்ளிகளாகவும் குழப்பத்தில் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 83.99 புள்ளிகள் அதிகரித்து, 57,612.47 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 28.10 புள்ளிகள் குறைந்து, 17,168.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,310 பங்குகள் ஏற்றத்திலும், 785 பங்குகள் சரிவிலும், 125 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், லார்சன், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, மாருதி சுசுகி, இந்தஸிந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, லார்சன், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, மாருதி சுசுகி, ஹெச்.சி.எல் டெக், இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 160.14 புள்ளிகள் குறைந்து, 57,536.32 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.90 புள்ளிகள் குறைந்து, 17,163.80 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் இன்று ரியால்டி பங்குகள் மற்றும் மெட்டல் பங்குகள் என பலவும் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications