இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்றே சரிவில் தான் தொடங்கின. தற்போதும் கூட சரிவில் தான் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்திருந்தன. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் தொடங்கியுள்ளன.
இதன் எதிரொலியாகத் தான் இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன.
உக்ரைன் பதற்றம்
உக்ரைன் ரஷ்யா இடையில் நிலவி வந்த பதற்றமான நிலைக்கு மத்தியில், ரஷ்ய படைகள் பின் வாங்கியதாக ரஷ்யா தெரிவித்தாலும், இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. ஆக எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. . ஆனால் நோட்டோவும், அமெரிக்காவும் எல்லை அருகே படைகளை குவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளன. இது முதலீட்டாளார்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினையே உருவாக்கியுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
பிப்ரவரி 17 நிலவரப் படி, 1242.10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 901.10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 457.72 புள்ளிகள் குறைந்து, 57,434.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 152.40 புள்ளிகள் குறைந்து, 17,152.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 135.20 புள்ளிகள் குறைந்து, 57,756.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 39.60 புள்ளிகள் குறைந்து, 17,265 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 734 பங்குகள் ஏற்றத்திலும், 1128 பங்குகள் சரிவிலும், 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் & நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா,லார்சன், எஸ்பிஐ ;லைஃப் இன்சூரன்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, டிவிஸ் லேப், விப்ரோ, ஹீரோ மோட்டோ கார்ப், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே விப்ரோ, இன்ஃபோசிஸ் , டெக் மகேந்திரா, நெஸ்டில், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
9.57 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 127.46 புள்ளிகள் குறைந்து, 57,764.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.85 புள்ளிகள் குறைந்து, 17,269.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications