முதல் நாளே சரிவு தான்.. என்ன காரணம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 4 அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இது இன்று தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றது.

இது இந்திய சந்தையில் இந்த வாரத்தில் எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். ஏனெனில் சந்தையானது திரும்பவும் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் சமீபத்தில் கூறியது நினைவுக்கூறத்தக்கது. ஆக வரவிருக்கும் வியாழக்கிழமையன்று எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தையில் முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்தாலும், நீண்டகால நோக்கில் பங்குகளை வாங்க இது சரியான இடமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்றே சரிவில் முடிவடைந்தன. இதனையடுத்து இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் தான் காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய பங்கு சந்தைகளும் இன்று ஏற்ற இறக்கத்தில் தான் காணப்படுகின்றது. இது அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து இருந்தாலும், பணவீக்கத்தின் அச்சம் சந்தையில் நிலவி வருகின்றது. இதன் எதிரொலி சந்தையில் காணப்படுகின்றது.

சீனாவின் நிலை

சீனாவின் நிலை

மேலும் சீனாவின் கொரோனா பெருந்தொற்றினையடுத்து, கடும் மின்வெட்டால், சீன பொருளாதாரம் கடும் மந்த நிலையை எதிர்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 121.75 புள்ளிகள் அதிகரித்து, 60,943.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 167.30 புள்ளிகள் அதிகரித்து, 18,282.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

தொடக்கத்தில் சென்செக்ஸ் 207.75 புள்ளிகள் அதிகரித்து, 61,029.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.20 புள்ளிகள் அதிகரித்து, 18,147.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,365 பங்குகள் ஏற்றத்திலும், 680 பங்குகள் சரிவிலும், 124 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் பேங்க் நிஃப்டி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவிலும் பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்டவை 1% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, ஓ.என்.ஜி.சி, ஆக்ஸிஸ் வங்கி, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிவிஎஸ் லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 352.13 புள்ளிகள் குறைந்து, 60,469.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 142.75 புள்ளிகள் குறைந்து, 17,972.15 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

இதற்கிடையில் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹெச்.டிஎ.ஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+