நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் மேற்கொண்டு ஏற்றம் கண்ட நிலையில், அதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தைகள் தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், மீண்டும் ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால் தொடக்கத்தில் நல்ல ஏற்றத்தில் காணப்பட்டாலும், தற்போது சற்று குறைந்துள்ளது. இது கடந்த வாரத்தினை தொடர்ந்து நடப்பு வாரத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்ந்து வருகின்றது. இது இன்னும் சரிவுக்கு வழிவகுக்கலாம்.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த அமர்வில் அன்னிய முதலீடுகளானது சந்தையில் இருந்து 202.13 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வெளியேற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 116.01 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 363.28 புள்ளிகள் அதிகரித்து, 60,501.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54.30 புள்ளிகள் அதிகரித்து, 17,984 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 187.28 புள்ளிகள் அதிகரித்து, 60.325.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 72.80 புள்ளிகள் அதிகரித்து, 18,002.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,524 பங்குகள் ஏற்றத்திலும், 395 பங்குகள் சரிவிலும், 73 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் BSE ஹெல்த்கேர் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் என்.டி.பி.சி, மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், யுபிஎல், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், யுபிஎல், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 86.65 புள்ளிகள் அதிகரித்து, 60,225.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23.20 புள்ளிகள் அதிகரித்து, 17,952.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இன்றைய பங்கு சந்தை நேரத்தில் ஆட்டோமொபைல் பங்குகள், ரியால்டி பங்குகள் கவனிக்க பட வேண்டியவையாக உள்ளன.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications